வியாழன், 4 ஏப்ரல், 2013

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்.

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்......!!!!!!

நான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.
பிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே போவதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே பயணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.
ஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப்பிரதட்சிணம் என்கிறோம்.
இந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.
பிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா? வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றிப் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்கள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.
 
தென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.
அதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம்தேவயானம் எனப்பட்டது.

முற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
நாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.

நாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.
இந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.
இங்கே ஒரு கேள்வி வரலாம்.

பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா? வேறு கிரகங்களில் இல்லையா? 

வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.
ஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.

பிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்சப் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றின் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.

பூமியின் திசைகள்

பூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.
இலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.
இலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’ வட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.

இப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

படைப்பு முன்னேறும் திசை

இனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக்சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதியில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.
ஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.
 
Sagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Gemini என்னும் மிதுனம்.

மிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.
இந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.
 
இந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம். தென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம். இந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வட கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசியில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.

இதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் VirgoSuper Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.
இந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.

1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.

இது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.
வாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.

2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.

இது தெ. மே -வ. கி பாதை.

இந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.
இந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.

கீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.

முக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிகிறது.
 
இந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு ட்டப்பட்டுள்ளது. மார்கழியில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.

அதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.

மிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.
நாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.

இவை இரண்டும் எதிர் காலம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்?

பாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்!

இந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.

மீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.
 
இதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.

மேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:

மார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.

இதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.

மகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.
 
தேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.

இப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.

சிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.
தோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.

வியாழன், 24 ஜனவரி, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்: எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்: எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...: உள்ளம் நிறைய வெள்ளம் போல ஓடும் எண்ணங்களை - விரும்பிய வண்ணங்களில் எழுத எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க ! எழுத்துக்கு வாசகர் பேச...

தேசீய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 2013 ஞா தி செ பு வி வெ ச « திசெ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 அண்மைய பின்னூட்டங்கள் Rajarajeswari jagham… on தேசீய பெண் குழந்தைகள் தின… ranjani135 on தேசீய பெண் குழந்தைகள் தின… venkat on தேசீய பெண் குழந்தைகள் தின… ranjani135 on ப்ளாக்பெர்ரி தம்ப்! rajalakshmiparamasiv… on ப்ளாக்பெர்ரி தம்ப்! விருந்தினர்கள் 1,574 hits FOLLOW BLOG VIA EMAIL Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 148 other followers மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இரத்த சோகை நோய் என்பது என்ன? நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது. நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு: HB % அதிக பட்சம்….. 14.08 gm % ஆண்கள ………………………. 13.00 gm % பெண்கள் ……………………… 11.00 gm % கர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm % குழந்தைகள் …………………………. 12.00 gm % பள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm % முதியோர்கள் 10.00 gm % இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம். இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது. மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது. இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம். இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்: பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும். எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம். எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும். இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன. பெண் குழந்தைகளைக் காப்போம்!

தேசீய பெண் குழந்தைகள் தினம்

ஜனவரி 2013
ஞாதிசெபுவிவெ
« திசெ  
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

விருந்தினர்கள்

  • 1,574 hits

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.
Join 148 other followers
girl child

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm %
ஆண்கள  ……………………….       13.00 gm %
பெண்கள்     ………………………    11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %
குழந்தைகள்   ………………………….  12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %
முதியோர்கள்                10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.
எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.
எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்போம்!

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பசி நீங்கினால் உள்ளம் குளிரும்

வாழ்க்கை ஒரு விளையாட்டு. என்ன கொஞ்சம் வித்தியாசமான விளையாட்டு. என்ன ரூல்ஸ்ன்னு பல சமயம் புரிவதில்லை. யார் எதிரின்னு எப்போவுமே புரியிறதில்லை. சுத்தி இருக்கிற அத்தனை பேரும், ஆளு எப்போடா அசருவான், கவுத்திடலாம்னு தான் நினைச்சு தொலையறாங்க. வெறுமனே புத்தி பலம் மட்டும் போதும்ன்னு விளையாண்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைச்சா, அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லைன்னு 'நங்'ன்னு குட்டு படும்போது தான் தெரியிது. 

கடவுள் கருணையில்லாதவன்னு எப்போவுமே ஒரு எண்ணம் இருக்கு. ஆளு எப்படி அடிச்சாலும் தாங்குறான், பாவம் போதும்ன்னு நினைக்கிறதே இல்லை. ஆனால், அந்த கருணைக் கடலின் கருணையில் தான் வண்டி எதோ இந்த மட்டிலுமாவது ஓடுதுன்னு , ரொம்ப லேட்டாத்தான் தெரிய வருது.

கேட்டா, இப்போத் தான் பக்குவம் வருதுன்னு சொல்றாங்க. யோவ், இந்த அடிக்கு மேலேயும் பக்குவம் வரலைன்னா, அப்புறம் என்னய்யா மனுஷன்! 
கீழே விழுந்திட்டாலும், மீசைலே மண்ணு ஒட்டலைலே, போங்கப்பான்னு தான் போய்ட்டிருக்கோம். 

சரி, எதுக்கு நமக்கு மட்டும் 
எதைத் தொட்டாலும் ஒன்னும் விளங்க மாட்டேங்குது....? ஒருக்க, ரெண்டு தடவை சரி.. ஏன்யா..எதை எடுத்தாலும் உருப்படாதுன்னா..? அப்படி என்னப்பா நாம தப்பு செஞ்சுட்டோம்..?

கிளி ஜோசியமா? நம்ம பேரு ராசிக்கு கிளி என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பாத்து சொல்லுய்யா.. மறுபடியும் துபாய்க்கே போகலாமா? இல்லை அப்படியே இங்கிட்டு ஓரம் சாரமா வண்டியை ஓட்டிக்கிட்டு பொழுதை கழிச்சிடலாமா? என்னய்யா இது, கிளி ஜோசியம்னா ஒரு முருகர், பிள்ளையார் வருவாங்க.. இங்கே இப்படிப் படம் வந்து இருக்கு.. !  
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRlll5wlB8SAFUkAcClWDGH_l2xsvpYvvTcbw-nEFAufeIBf8Uj

சரி, காமெடியெல்லாம் போதும் -  நிஜமாகவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகத் தான் போகுது பாஸ்...! ஏன் இப்படி? என்ன பண்ணினா இது நல்லாகும்?  

சில பேருக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட முயற்சிகள் எடுத்தாலும் அது கை கூடுவதில்லை. அத்தி பூத்தாற்போல எதோ ஒரு காரியம் நல்ல விதமாக முடியும் நிலை வரும். ஆனால் எங்கிருந்தோ ஒரு குறுக்கீடு வரும், திரும்ப முதல்ல இருந்த நிலைமைக்கும் ஒரு படி கீழே கொண்டுபோய் விடும்...! அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் சரி. 

இந்த மாதிரி அமைப்பு - ஏதோ ஒரு சிலருக்கு அல்ல! பெரும்பாலோருக்கு. ஏன்? கலி காலமாச்சே. சுயநலம் மட்டுமே முக்கியம் என்று - பண்ணும் சில காரியங்கள், ஒட்டு மொத்தமாக ஒரு நாள் திருப்பி அடிக்கும் அல்லவா? அந்த மாதிரி அமைப்பு அந்த குறிப்பிட்ட நபர் அவர் செய்த பாவச் செயல்கள் மட்டும் இல்லாது , அந்த பரம்பரையிலும் யாராவது அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. 

ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், சொத்து பிரிப்பது என்று வைத்துக் கொள்வோம். தன் கை ஓங்கி இருக்கிறது என்று உடன் பிறந்தவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றை ஒருவர் அபகரித்து ஏமாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இது வட்டியும், முதலுமாக அவர் காலத்திலேயே, அவர்கள் சந்ததிக்குள் பிரளயம் ஏற்படுத்தும். அல்லது காலம் கடந்து நடந்தாலும், அவர் சந்ததியினரை குப்புற புரட்டி எடுக்கும்.தன் உடன் வளர்ந்த சகோதர சகோதரியையே ஒருவர் நயவஞ்சகமாக ஏமாற்ற முடியும் என்றால், மற்றவர்களை அவர் எவ்வளவு ஏமாற்ற முனைவர்? 

அதிலும் ஒரு சிலர் நிலைமை ரொம்பவே பாவமாக இருக்கும். மனசு அறிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலையே சார். எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு மருகுவார்கள். பார்க்கவே பாவமாகத் தான் இருக்கும். ஓஹோ என்று இருந்த குடும்பம் இன்று ஒன்றுக்கும் இல்லாத நிலைக்கு வந்து விட்டது என்று கூறுவோமே..! அது எல்லாம் இந்த கதைதான். சொந்தத்தில் அத்தை, மாமா பெண் திருமண வயதில் இருக்க, பெரியோர்களால் திருமணம் நடத்த ஏற்கனவே உறுதி அளித்து இருந்து , அவர்களும் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல் பழக ஆரம்பித்து - ஆனால் உரிய திருமண காலத்தில் அந்தஸ்தை காரணம் காட்டி பையனோ /  பெண்ணோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் இதே அளவு பாவமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சு கொதிப்பதால் வரும் வேதனை, அந்த இன்னொருவர் தலைமுறையை பாதித்து விடுகிறது.

இதைப்போன்ற சில தகாத செயல்கள் செய்தவர்களின் ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது - அவர்களின் ஜாதக கட்டங்களில் , கொடிய பாவ கிரகங்கள் என கருதப்படும் - செவ்வாயும், சனியும் இணைந்தோ - அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ அமைந்து இருக்கும். செவ்வாய்க்கு - 4 , 7 , 8 ஆம் பார்வையும் - சனிக்கு - 3 - 7 - 10 ஆம் பார்வையும் உண்டு. 

இந்த மாதிரி சனியும், செவ்வாயும் இணைந்து இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாத ஒரு சூழல் எப்போதுமே நிலவும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்க்கு பரிகாரம் என்று பார்த்தால் - முறையான இறைவழிபாடு, முடிந்த அளவுக்கு திருவண்ணாமலை கிரிவலம், 
சதுரகிரி செல்வது போல பவித்திரமான இறை தரிசனம் செய்வது. மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அன்ன தானம் செய்வது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு.அன்னதானம் எவ்வளவு பெரிய விஷயம், ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை படித்துப் பாருங்கள். 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQXQA2LWt6I35iAVie6ovdjYvmVu-tkI-JtHU9pLoxdus6ufNDyvA

* அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

* அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

* பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

* பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

* பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

* பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

* கடவுள் ஒருவரே! உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில்ஜீவஇம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடேஉயர்ந்தவழிபாடாகும்.

* மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

* எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.  

நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.  =================================  

நம் வாசகர்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்வதற்காக , நண்பர் கோடியில் ஒருவன் அவர்கள் இந்த கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அன்னதானத்தின் , பகிர்ந்துண்ணலின் மகத்துவம் பற்றி அற்புதமாக திருமதி பாரதி பாஸ்கர் தினகரனுக்காக எழுதியுள்ள கட்டுரை. அவசியம் படித்துப் பாருங்கள்.முழுவதும் பொறுமையாகப் படித்து உள்வாங்குங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் பொதிந்து இருக்கின்றன.   

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து அதன் பிறகு மவுசில் ரைட் க்ளிக் செய்து வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு படத்தை க்ளிக் செய்ய , கட்டுரை நீங்கள் படிக்கும் அளவுக்கு பெரிதாகத் தெரியும். 

மிக அருமையான இந்த கட்டுரையை நமக்காக அனுப்பிய நண்பர். கோடியில் ஒருவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..!
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!

source help with thanks from
Read more: http://www.livingextra.com/2012/09/blog-post_14.html#ixzz2Iky5JAoT