வியாழன், 24 ஜனவரி, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்: எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்: எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...: உள்ளம் நிறைய வெள்ளம் போல ஓடும் எண்ணங்களை - விரும்பிய வண்ணங்களில் எழுத எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க ! எழுத்துக்கு வாசகர் பேச...

தேசீய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 2013 ஞா தி செ பு வி வெ ச « திசெ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 அண்மைய பின்னூட்டங்கள் Rajarajeswari jagham… on தேசீய பெண் குழந்தைகள் தின… ranjani135 on தேசீய பெண் குழந்தைகள் தின… venkat on தேசீய பெண் குழந்தைகள் தின… ranjani135 on ப்ளாக்பெர்ரி தம்ப்! rajalakshmiparamasiv… on ப்ளாக்பெர்ரி தம்ப்! விருந்தினர்கள் 1,574 hits FOLLOW BLOG VIA EMAIL Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 148 other followers மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இரத்த சோகை நோய் என்பது என்ன? நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது. நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு: HB % அதிக பட்சம்….. 14.08 gm % ஆண்கள ………………………. 13.00 gm % பெண்கள் ……………………… 11.00 gm % கர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm % குழந்தைகள் …………………………. 12.00 gm % பள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm % முதியோர்கள் 10.00 gm % இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம். இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது. மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது. இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம். இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்: பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும். எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம். எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும். இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன. பெண் குழந்தைகளைக் காப்போம்!


தேசீய பெண் குழந்தைகள் தினம்

ஜனவரி 2013
ஞாதிசெபுவிவெ
« திசெ  
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

விருந்தினர்கள்

  • 1,574 hits

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.
Join 148 other followers
girl child

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm %
ஆண்கள  ……………………….       13.00 gm %
பெண்கள்     ………………………    11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %
குழந்தைகள்   ………………………….  12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %
முதியோர்கள்                10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.
எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.
எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்போம்!

ஜனவரி 2013
ஞாதிசெபுவிவெ
« திசெ  
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

விருந்தினர்கள்

  • 1,574 hits

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.
Join 148 other followers
girl child

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm %
ஆண்கள  ……………………….       13.00 gm %
பெண்கள்     ………………………    11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %
குழந்தைகள்   ………………………….  12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %
முதியோர்கள்                10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.
எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.
எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்போம்!

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பசி நீங்கினால் உள்ளம் குளிரும்

வாழ்க்கை ஒரு விளையாட்டு. என்ன கொஞ்சம் வித்தியாசமான விளையாட்டு. என்ன ரூல்ஸ்ன்னு பல சமயம் புரிவதில்லை. யார் எதிரின்னு எப்போவுமே புரியிறதில்லை. சுத்தி இருக்கிற அத்தனை பேரும், ஆளு எப்போடா அசருவான், கவுத்திடலாம்னு தான் நினைச்சு தொலையறாங்க. வெறுமனே புத்தி பலம் மட்டும் போதும்ன்னு விளையாண்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைச்சா, அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லைன்னு 'நங்'ன்னு குட்டு படும்போது தான் தெரியிது. 

கடவுள் கருணையில்லாதவன்னு எப்போவுமே ஒரு எண்ணம் இருக்கு. ஆளு எப்படி அடிச்சாலும் தாங்குறான், பாவம் போதும்ன்னு நினைக்கிறதே இல்லை. ஆனால், அந்த கருணைக் கடலின் கருணையில் தான் வண்டி எதோ இந்த மட்டிலுமாவது ஓடுதுன்னு , ரொம்ப லேட்டாத்தான் தெரிய வருது.

கேட்டா, இப்போத் தான் பக்குவம் வருதுன்னு சொல்றாங்க. யோவ், இந்த அடிக்கு மேலேயும் பக்குவம் வரலைன்னா, அப்புறம் என்னய்யா மனுஷன்! 
கீழே விழுந்திட்டாலும், மீசைலே மண்ணு ஒட்டலைலே, போங்கப்பான்னு தான் போய்ட்டிருக்கோம். 

சரி, எதுக்கு நமக்கு மட்டும் 
எதைத் தொட்டாலும் ஒன்னும் விளங்க மாட்டேங்குது....? ஒருக்க, ரெண்டு தடவை சரி.. ஏன்யா..எதை எடுத்தாலும் உருப்படாதுன்னா..? அப்படி என்னப்பா நாம தப்பு செஞ்சுட்டோம்..?

கிளி ஜோசியமா? நம்ம பேரு ராசிக்கு கிளி என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பாத்து சொல்லுய்யா.. மறுபடியும் துபாய்க்கே போகலாமா? இல்லை அப்படியே இங்கிட்டு ஓரம் சாரமா வண்டியை ஓட்டிக்கிட்டு பொழுதை கழிச்சிடலாமா? என்னய்யா இது, கிளி ஜோசியம்னா ஒரு முருகர், பிள்ளையார் வருவாங்க.. இங்கே இப்படிப் படம் வந்து இருக்கு.. !  
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRlll5wlB8SAFUkAcClWDGH_l2xsvpYvvTcbw-nEFAufeIBf8Uj

சரி, காமெடியெல்லாம் போதும் -  நிஜமாகவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகத் தான் போகுது பாஸ்...! ஏன் இப்படி? என்ன பண்ணினா இது நல்லாகும்?  

சில பேருக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட முயற்சிகள் எடுத்தாலும் அது கை கூடுவதில்லை. அத்தி பூத்தாற்போல எதோ ஒரு காரியம் நல்ல விதமாக முடியும் நிலை வரும். ஆனால் எங்கிருந்தோ ஒரு குறுக்கீடு வரும், திரும்ப முதல்ல இருந்த நிலைமைக்கும் ஒரு படி கீழே கொண்டுபோய் விடும்...! அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் சரி. 

இந்த மாதிரி அமைப்பு - ஏதோ ஒரு சிலருக்கு அல்ல! பெரும்பாலோருக்கு. ஏன்? கலி காலமாச்சே. சுயநலம் மட்டுமே முக்கியம் என்று - பண்ணும் சில காரியங்கள், ஒட்டு மொத்தமாக ஒரு நாள் திருப்பி அடிக்கும் அல்லவா? அந்த மாதிரி அமைப்பு அந்த குறிப்பிட்ட நபர் அவர் செய்த பாவச் செயல்கள் மட்டும் இல்லாது , அந்த பரம்பரையிலும் யாராவது அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. 

ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், சொத்து பிரிப்பது என்று வைத்துக் கொள்வோம். தன் கை ஓங்கி இருக்கிறது என்று உடன் பிறந்தவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றை ஒருவர் அபகரித்து ஏமாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இது வட்டியும், முதலுமாக அவர் காலத்திலேயே, அவர்கள் சந்ததிக்குள் பிரளயம் ஏற்படுத்தும். அல்லது காலம் கடந்து நடந்தாலும், அவர் சந்ததியினரை குப்புற புரட்டி எடுக்கும்.தன் உடன் வளர்ந்த சகோதர சகோதரியையே ஒருவர் நயவஞ்சகமாக ஏமாற்ற முடியும் என்றால், மற்றவர்களை அவர் எவ்வளவு ஏமாற்ற முனைவர்? 

அதிலும் ஒரு சிலர் நிலைமை ரொம்பவே பாவமாக இருக்கும். மனசு அறிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலையே சார். எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு மருகுவார்கள். பார்க்கவே பாவமாகத் தான் இருக்கும். ஓஹோ என்று இருந்த குடும்பம் இன்று ஒன்றுக்கும் இல்லாத நிலைக்கு வந்து விட்டது என்று கூறுவோமே..! அது எல்லாம் இந்த கதைதான். சொந்தத்தில் அத்தை, மாமா பெண் திருமண வயதில் இருக்க, பெரியோர்களால் திருமணம் நடத்த ஏற்கனவே உறுதி அளித்து இருந்து , அவர்களும் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல் பழக ஆரம்பித்து - ஆனால் உரிய திருமண காலத்தில் அந்தஸ்தை காரணம் காட்டி பையனோ /  பெண்ணோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் இதே அளவு பாவமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சு கொதிப்பதால் வரும் வேதனை, அந்த இன்னொருவர் தலைமுறையை பாதித்து விடுகிறது.

இதைப்போன்ற சில தகாத செயல்கள் செய்தவர்களின் ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது - அவர்களின் ஜாதக கட்டங்களில் , கொடிய பாவ கிரகங்கள் என கருதப்படும் - செவ்வாயும், சனியும் இணைந்தோ - அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ அமைந்து இருக்கும். செவ்வாய்க்கு - 4 , 7 , 8 ஆம் பார்வையும் - சனிக்கு - 3 - 7 - 10 ஆம் பார்வையும் உண்டு. 


இந்த மாதிரி சனியும், செவ்வாயும் இணைந்து இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாத ஒரு சூழல் எப்போதுமே நிலவும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்க்கு பரிகாரம் என்று பார்த்தால் - முறையான இறைவழிபாடு, முடிந்த அளவுக்கு திருவண்ணாமலை கிரிவலம், 
சதுரகிரி செல்வது போல பவித்திரமான இறை தரிசனம் செய்வது. மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அன்ன தானம் செய்வது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு.அன்னதானம் எவ்வளவு பெரிய விஷயம், ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை படித்துப் பாருங்கள். 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQXQA2LWt6I35iAVie6ovdjYvmVu-tkI-JtHU9pLoxdus6ufNDyvA

* அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

* அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

* பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

* பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

* பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

* பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

* கடவுள் ஒருவரே! உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில்ஜீவஇம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடேஉயர்ந்தவழிபாடாகும்.

* மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

* எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.  


நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.  =================================  

நம் வாசகர்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்வதற்காக , நண்பர் கோடியில் ஒருவன் அவர்கள் இந்த கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அன்னதானத்தின் , பகிர்ந்துண்ணலின் மகத்துவம் பற்றி அற்புதமாக திருமதி பாரதி பாஸ்கர் தினகரனுக்காக எழுதியுள்ள கட்டுரை. அவசியம் படித்துப் பாருங்கள்.முழுவதும் பொறுமையாகப் படித்து உள்வாங்குங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் பொதிந்து இருக்கின்றன.   

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து அதன் பிறகு மவுசில் ரைட் க்ளிக் செய்து வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு படத்தை க்ளிக் செய்ய , கட்டுரை நீங்கள் படிக்கும் அளவுக்கு பெரிதாகத் தெரியும். 

மிக அருமையான இந்த கட்டுரையை நமக்காக அனுப்பிய நண்பர். கோடியில் ஒருவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..!
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!

source help with thanks from
Read more: http://www.livingextra.com/2012/09/blog-post_14.html#ixzz2Iky5JAoT

திங்கள், 21 ஜனவரி, 2013

உலக பணக்கார பெண்களில் ஒரே ஒரு இ‌ந்‌திய‌ர்

 
உலக பணக்கார பெண்களில் ஒரே ஒரு இ‌ந்‌திய‌ர்
உலக பண‌க்கார‌ர்க‌ளி‌ன் ப‌ட்டிய‌லி‌ல் முத‌ல் 10 நப‌ர்க‌ளி‌ல் 4 அ‌ல்லது 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் இட‌ம்பெ‌ற்று ‌விடுவா‌ர்க‌ள். ஆனா‌ல், உலக பண‌‌க்கார பெ‌ண்க‌‌ள் ப‌ட்டிய‌லிலேயே ஒரே ஒரு இ‌ந்‌திய‌ப் பெ‌ண்ம‌ணிதா‌ன் இட‌ம்பெ‌ற்று‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. அவ‌ர் ‌ஜி‌ண்டா‌ல் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த சா‌வி‌த்‌‌ரி ‌ஜி‌ண்டா‌ல். 

webdunia photoWD
ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உலக பணக்கார பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடு‌கிறது. இ‌ந்த ஆ‌ண்டு‌ம் அ‌ந்த ப‌ட்டியலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. இந்த ஆண்டு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்ட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் வால்மார்ட் நிறுவன அதிபர் கிறிஸ்டி வால்டன். இவர் தொழிலதிபர் ஜான் வால்டனின் மனைவி. 

ஜான் வால்டன் 2005ல் நடந்த விமான விபத்தில் இறந்தார். அப்போது அவரது சொத்து ரூ.73,900 கோடி கிறிஸ்டியிடம் வந்தது. அதை இப்போது ரூ.1,00,000 கோடியாக அதிகரிக்கச் செய்துள்ளார் ‌கி‌றி‌ஸ்டி வா‌ல்ட‌ன் (சபா‌ஷ‌்). 

2வது இடத்தில் கிறிஸ்டியின் நாத்தனார் (ஜா‌ன் வா‌ல்ட‌னி‌ன் சகோத‌ரி) அலைஸ் உள்ளார். வால் மார்ட் நிறுவனங்களின் நிறுவனர் சாம் வால்டனின் மகள் இவர். இவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.91,650 கோடி. 

கடந்த ஆண்டு இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் லிலியன் பெட்டன்கோர்ட். அப்போது இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.70,500 கோடி. அழகுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்ஓரியல் நிறுவனர் ஈஜின் சுல்லரின் மகள் இவர்.

200 பெ‌ண்க‌ள் அட‌ங்‌கிய உலக பணக்காரர்கள் பட்டியலில், ஜிண்டால் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 9வது இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய பெண் இவர்தா‌ன் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த் த‌க்கது.

58 வயதாகு‌ம் சா‌வி‌த்‌ரி ‌ஜி‌ண்டா‌ல், ஹூடா அமை‌ச்சரவை‌யிலு‌ம் இட‌ம்பெ‌ற்றவ‌ர். இவர‌் இ‌ந்‌தியா‌வி‌‌ன் பண‌க்கா பெ‌ண்க‌ளி‌ல் முத‌ல் இட‌த்‌தி‌ல் இரு‌ப்பவரு‌ம் ஆவா‌ர். ‌‌நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினராக இரு‌ந்த ஜி‌ண்டா‌லி‌ன் கணவ‌ர் ஓ.‌பி. ‌ஜி‌ண்டா‌ல் கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். கணவ‌ர் உ‌யி‌ரிழ‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து, ‌‌ஹ‌ிசா‌ர் தொகு‌தி‌யி‌ல் நட‌ந்த இடை‌த் தே‌ர்த‌லி‌ல் ‌நி‌ன்று பெரு‌ம் வா‌க்குக‌ள் ‌வி‌த்‌திசா‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர் சா‌வி‌த்‌ரி ‌ஜி‌ண்டா‌ல். 

‌‌ஜி‌ண்டா‌ல் த‌ம்ப‌திகளு‌க்கு 4 ‌பி‌ள்ளைகளு‌ம், 5 மக‌ள்களு‌ம் உ‌ள்ளன‌ர். அ‌தி‌ல் ந‌வீ‌ன் ‌ஜி‌ண்டா‌ல் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரு‌ம், தொ‌ழி‌ல் அ‌திபருமாவா‌ர். 

ஜி‌ண்டா‌ல் குழும‌‌ம் சா‌ர்‌பி‌ல் இரு‌ம்பு, ‌‌ஸ்டீ‌ல், எ‌ரிச‌க்‌தி‌த் துறைக‌ளி‌ல் சுமா‌ர் 15,000 கோடி ரூபா‌ய் முத‌லீடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், தெ‌ன்அமெ‌ரி‌க்க நாடுகளான ‌சி‌லி, பொ‌லி‌வியா, பெரு ஆ‌கியவ‌ற்‌றிலு‌ம் ‌நிறுவன‌ங்களை நட‌த்‌தி வரு‌கிறது ‌ஜி‌ண்டா‌ல் குழும‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. 

வையம் காத்தப் பெருமாள்





கும்பகோணம் பாப நாசம் பாதையில் திருவையாறு செல்லும் வழியில் ஆடுதுறைபெருமாள் ( உள்ளிக்கடை) கோயில் உள்ளது.

நின்றகோலத்தில் ஜகத் ரட்சகனாக, உய்யவந்தாராக, வையம் காத்தப் பெருமாள் , கிழக்கு நோக்கியவாறு மக்களுக்கு அருளாட்சி புரிந்து வருகின்றார்!

பெண்களின் திருமணத்தடை நீங்க விரிவான பரிகார முறை :

காரணம் : முன் பிறவியில் கொடுமைக்கார கணவன் வாய்த்து, அதன் காரணமாக எனக்குத் திருமணமே வேண்டாம் என மனமுருகி இறைவனிடம் பல முறை வேண்டியதன் அடிப்படையில் திருமணத்தடை ஏற்பட்டுவிட்டது.
இப் பிறவியில் காலத்தில் திருமணம் நடைபெறவில்லையே என்ற வருத்தமும், ஏக்கமும் பெற்றோருக்கு ஏற்படுவது இயற்கை. இதற்குப் பரிகாரமாக, பல ஆலயங்கள் செல்ல வேண்டியது இருக்கின்றது!
வரிசைக்கிரமமாக செய்ய வேண்டும்.

1. கதம்ப ஷேத்ரமான , திருக்கரம்பனூரில் குடிகொண்டுள்ள புருஷோத்தமராம் உத்தமராக குடிகொண்டுள்ள ஆலயம் முதல் பரிகாரம். பிரம்மன் எழுதிய தலைஎழுத்தை அவரிடமே மாற்ற விண்ணப்பம் அளிக்க வேண்டும் அல்லவா!

வியாழக்கிழமை நாளில் இவ்வாலயம் ( திருச்சி - உத்தமர் ஆலயம் ) செல்ல வேண்டும். சரஸ்வதித் தாயார், பிரம்மன் , புருஷோத்தமர் மற்றும் மஹாலஷ்மித் தாயார் ஆகிய நால்வருக்கும் தாமரை மலர் மற்றும் மூன்று அர்ச்சனைக்குரிய பொருட்கள் மற்றும் கற்கண்டு ( 150 gms ) , நெய் விளக்குகள்
ஏற்ற புதிய அகல் விளக்குகள் (             ) வாங்கிச் செல்ல வேண்டும்.

முதலில் பிரம்ம தேவருக்கு, திருமணம் விரைவில் நடைபெற வேண்டும். திவ்யமான குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும். என அர்ச்சகரிடம் குறை சொல்லி தாமரை மலர் மற்றும் தேங்காய், ஆறு வாழைப் பழம், ஊதுவத்தி , நெய் ( 50 / 100 gms ) கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்து, சரஸ்வதித் தாயாருக்கு மஞ்சள், குங்குமம் , தாமரை மலரொன்று கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த பின், இரு நெய் அகல் தீபம் ஏற்றிட வேண்டும்.

இரண்டாவதாக, உத்தமராம் புருஷோத்தமரை தரிசிக்க செல்ல வேண்டும். அங்கும் தாமரை மலர் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்தபின், கர்ப்பகிரகத்தின் முன்னர் கதம்ப முனிவர் வலதுபுறம் சிலை ரூபத்தில் சுவற்றில் வடிக்கப்பட்டிக்கும். அவரின் பாதம் தொட்டு வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். மஹாலஷ்மி தாயாருக்கும் தாமரை மலர், மஞ்சள் குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இரு நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். அதன்பின்னர், டைமண்ட் கற்கண்டு மூவிரல்களால் வினியோகிக்க வேண்டும். வினியோகித்தபின்னர்,  ஆஞ்ச நேயரை தரிசிக்க வேண்டும். இங்கும், அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த பின்னர், அவரை மாத்திரம் தனித்து, ஒன்பது சுற்றுகள் சுற்றிவர வேண்டும். அதன் பின்னரே பிச்சாடனரையும் அம்மையையும் தரிசிக்க வேண்டும். நவகிரஹங்களை சுற்றுதல் , வணங்குதல் கூடாது. ஆலயம் வலம் மூன்று முறை சுற்றி வந்தபின்னர், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இருபது நிமிடம் அமர்ந்திருந்து இருபத்தோராம் நிமிடம் ஆலயத்திலிருந்து வெளிவந்து இல்லம் திரும்ப வேண்டும். இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருக்குமரனுக்கு நெய் தீபமேற்றி , அத்தீபம் அணையும் வரை இல்லம் விட்டு வெளியில் செல்லுதல் கூடாது. தூங்கவும் கூடாது. விழித்திருக்க வேண்டும்.. அத்தீபம் அணையும் வரை யாரிடமும் பேசாமல் மனமுருகி வேண்டவும். பக்திப் பாடல்கள் படிக்கவும். அதன் பின்னர், வாழைப்பழங்களை, பசுவிற்கும், தேங்காய்களை வயதான மூதாத்தையருக்கும் கொடுத்துவிட வேண்டும். கொடுத்த பிறகே முதல் பரிகாரம் முற்றியது!

2. திருச்சி  ஸ்ரீரங்கம் அடுத்த வாரம் ஞாயிறு சென்று அர்ச்சனை செய்து ஐந்து நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். களத்திர தோஷம் நீங்கிட பரிகாரம் செய்திட வேண்டும்.

3. வெள்ளிக் கிழமைகளில் இராகுகால எலுமிச்சம்பழ விளக்கேற்றி ஒன்பது வாரங்கள் செய்திட வேண்டும். பத்தாம் வாரம் , அர்ச்சனைப் பொருட்களுடன், மஞ்சள் குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இரு தீபங்கள் ஏற்றிடுதல் வேண்டும். தனித்திருக்கும் துர்க்கை ஆலயங்களில் செய்வது சிறப்பு. சிவாலயத்திலும் செய்யலாம். ஆனால், நவக்கிரஹ வழிபாடு, வணங்குதல், சுற்றுதல் கூடாது.

4. இந்த ஒன்பது வார நெய் விளக்கேற்றும் காலத்திலேயே, சுதர்சன சக்கரத்தாழ்வாரையும் தொடர்ந்தாற்போல, இருபத்தேழு நாட்கள் , ஒவ்வொரு தரிசனத்தின் போதும், இருபத்தேழு சுற்றுகள் சுற்றி வந்து வழிபட வேண்டும். ஓம் ஸஹஸ்ராய ஹீம்பட் என்று உச்சரித்துக் கொண்டே சுற்றி வருதல் வேண்டும். முதல் நாள் ஒரு நெய் தீபம் கொண்டு, இருபத்தேழு விளக்குகள் ஏற்றிய பின்னர் சுற்றி வரவேண்டும். மற்றும் 9 , 18 , 27 , மற்றும் 28 ஆம் நாட்களிலும் இருபத்தேழு நெய் அகல் தீபங்கள் ஏற்றிட வேண்டும். இதர நாட்களில், ஐந்து ஊதுவத்திகள் ஏற்றினாலே போதுமானது.

5. இப்பரிகாரம் முடித்த பின்னரே , வையம் காத்த பெருமாள் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். கொடி மரம் வணங்கி, ஆலய வலம் வரவேண்டும். வலம் வந்த பின்னர், சங்கு உருவாகியுள்ள பலா மரத்தினருகே ஐந்து நெய் அகல் தீபங்கள், ஊதுவத்தி ஏற்றி வழிபட்டு, அதன் பின்னரே மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து, கருடாழ்வார் முன்பாக, ஐந்து தீபமேற்றிட வேண்டும். இத்தலத்தில் , பெண்களுக்கான திருமண வரம் நல்குபவரே தாயார் தான். அதனால் தாயாருக்கும், மஞ்சள் குங்குமம் கொடுத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர், இரு நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

மும்முறை இட வலமாக ஐந்து சுற்றுகள் சுற்றிவந்து, கொடிமரத்தினருகே சாஷ்டாங்க நமஸ்கரித்து, இருபது நிமிடம் அமர்ந்து, இருபத்தோராம் நிமிடம் யாருக்கும் பிச்சையிடாமல் இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருக்குமரனுக்கு ஒரு நெய் தீபமேற்றி , தீபம் அணையும் வரை பூசையிலிருந்து பரிகாரம் முடிக்கவும்.

மஹாலஷ்மித் தாயாரிடம் திருமண வரமும், சுபிட்ஷமான வாழ்க்கை அமையவும் வேண்டுதல் வேண்டும். திருமணம் முடிந்தவுடன், கணவனுடன் வந்து, பிரார்த்தனையின் படி ஏதாகிலும் செய்ய வேண்டும்.

பிரார்த்தனை :
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளம் சிறுவ சிறுமியருக்கு, ஏழை விதவைத் தாய்மார்களுக்கு, முதுமையான பெரியவர்களுக்கு அன்னதானம், புதிய உடை தானம் செயவது சிறப்பு.

இவ்வைந்து பரிகாரங்கள் செய்பவருக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும்.

சனி, 19 ஜனவரி, 2013

நாகங்கள்


நாகங்கள்







நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சக்தியாகவும் அமானுஸ்யம் நிறைந்ததாகவும் கண்டார்கள் . 



புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள்.

இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.

பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததே யாகும்

இனி நாக வழிபாடு நம் நாட்டில் எப்போது இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்வோம்.

இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது.

சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம்.

திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.

வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை பற்றி விரிவான குறிப்புகள் வருகின்றன.

வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை.

ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீ சத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம்.

இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது.

அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன 


நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது.

கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும்.

பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.

இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.

மலாய்காரர்களின் கிரீஸ் {KERIS} என்று சொல்லப்படும் ஆயுதம் கூட பாம்பின் வடிவில் இருப்பதை பார்த்திருக்கலாம்

ஜோதிட சாஸ்திரத்தில் காணப்படும் சர்ப்பக் கிரகங்களாகிய இராகு கேதுக்களை வைத்து நம் பரம்பரையில் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினை சாரங்களை கண்டரிய முடியும் என்று கூறுகின்றார்கள்.

இதையே சீனர்கள் {DRAGON} கடல் நாகங்களாக வழிப்படுகின்றார்கள்

மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.

பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும்.

ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும்

நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு

சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்

மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன

இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்

நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம் 


எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்