கும்பகோணம் பாப நாசம் பாதையில் திருவையாறு செல்லும் வழியில் ஆடுதுறைபெருமாள் ( உள்ளிக்கடை) கோயில் உள்ளது.
நின்றகோலத்தில் ஜகத் ரட்சகனாக, உய்யவந்தாராக, வையம் காத்தப் பெருமாள் , கிழக்கு நோக்கியவாறு மக்களுக்கு அருளாட்சி புரிந்து வருகின்றார்!
பெண்களின் திருமணத்தடை நீங்க விரிவான பரிகார முறை :
காரணம் : முன் பிறவியில் கொடுமைக்கார கணவன் வாய்த்து, அதன் காரணமாக எனக்குத் திருமணமே வேண்டாம் என மனமுருகி இறைவனிடம் பல முறை வேண்டியதன் அடிப்படையில் திருமணத்தடை ஏற்பட்டுவிட்டது.
இப் பிறவியில் காலத்தில் திருமணம் நடைபெறவில்லையே என்ற வருத்தமும், ஏக்கமும் பெற்றோருக்கு ஏற்படுவது இயற்கை. இதற்குப் பரிகாரமாக, பல ஆலயங்கள் செல்ல வேண்டியது இருக்கின்றது!
வரிசைக்கிரமமாக செய்ய வேண்டும்.
1. கதம்ப ஷேத்ரமான , திருக்கரம்பனூரில் குடிகொண்டுள்ள புருஷோத்தமராம் உத்தமராக குடிகொண்டுள்ள ஆலயம் முதல் பரிகாரம். பிரம்மன் எழுதிய தலைஎழுத்தை அவரிடமே மாற்ற விண்ணப்பம் அளிக்க வேண்டும் அல்லவா!
வியாழக்கிழமை நாளில் இவ்வாலயம் ( திருச்சி - உத்தமர் ஆலயம் ) செல்ல வேண்டும். சரஸ்வதித் தாயார், பிரம்மன் , புருஷோத்தமர் மற்றும் மஹாலஷ்மித் தாயார் ஆகிய நால்வருக்கும் தாமரை மலர் மற்றும் மூன்று அர்ச்சனைக்குரிய பொருட்கள் மற்றும் கற்கண்டு ( 150 gms ) , நெய் விளக்குகள்
ஏற்ற புதிய அகல் விளக்குகள் ( ) வாங்கிச் செல்ல வேண்டும்.
முதலில் பிரம்ம தேவருக்கு, திருமணம் விரைவில் நடைபெற வேண்டும். திவ்யமான குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும். என அர்ச்சகரிடம் குறை சொல்லி தாமரை மலர் மற்றும் தேங்காய், ஆறு வாழைப் பழம், ஊதுவத்தி , நெய் ( 50 / 100 gms ) கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்து, சரஸ்வதித் தாயாருக்கு மஞ்சள், குங்குமம் , தாமரை மலரொன்று கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த பின், இரு நெய் அகல் தீபம் ஏற்றிட வேண்டும்.
இரண்டாவதாக, உத்தமராம் புருஷோத்தமரை தரிசிக்க செல்ல வேண்டும். அங்கும் தாமரை மலர் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்தபின், கர்ப்பகிரகத்தின் முன்னர் கதம்ப முனிவர் வலதுபுறம் சிலை ரூபத்தில் சுவற்றில் வடிக்கப்பட்டிக்கும். அவரின் பாதம் தொட்டு வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். மஹாலஷ்மி தாயாருக்கும் தாமரை மலர், மஞ்சள் குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இரு நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். அதன்பின்னர், டைமண்ட் கற்கண்டு மூவிரல்களால் வினியோகிக்க வேண்டும். வினியோகித்தபின்னர், ஆஞ்ச நேயரை தரிசிக்க வேண்டும். இங்கும், அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த பின்னர், அவரை மாத்திரம் தனித்து, ஒன்பது சுற்றுகள் சுற்றிவர வேண்டும். அதன் பின்னரே பிச்சாடனரையும் அம்மையையும் தரிசிக்க வேண்டும். நவகிரஹங்களை சுற்றுதல் , வணங்குதல் கூடாது. ஆலயம் வலம் மூன்று முறை சுற்றி வந்தபின்னர், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இருபது நிமிடம் அமர்ந்திருந்து இருபத்தோராம் நிமிடம் ஆலயத்திலிருந்து வெளிவந்து இல்லம் திரும்ப வேண்டும். இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருக்குமரனுக்கு நெய் தீபமேற்றி , அத்தீபம் அணையும் வரை இல்லம் விட்டு வெளியில் செல்லுதல் கூடாது. தூங்கவும் கூடாது. விழித்திருக்க வேண்டும்.. அத்தீபம் அணையும் வரை யாரிடமும் பேசாமல் மனமுருகி வேண்டவும். பக்திப் பாடல்கள் படிக்கவும். அதன் பின்னர், வாழைப்பழங்களை, பசுவிற்கும், தேங்காய்களை வயதான மூதாத்தையருக்கும் கொடுத்துவிட வேண்டும். கொடுத்த பிறகே முதல் பரிகாரம் முற்றியது!
2. திருச்சி ஸ்ரீரங்கம் அடுத்த வாரம் ஞாயிறு சென்று அர்ச்சனை செய்து ஐந்து நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். களத்திர தோஷம் நீங்கிட பரிகாரம் செய்திட வேண்டும்.
3. வெள்ளிக் கிழமைகளில் இராகுகால எலுமிச்சம்பழ விளக்கேற்றி ஒன்பது வாரங்கள் செய்திட வேண்டும். பத்தாம் வாரம் , அர்ச்சனைப் பொருட்களுடன், மஞ்சள் குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இரு தீபங்கள் ஏற்றிடுதல் வேண்டும். தனித்திருக்கும் துர்க்கை ஆலயங்களில் செய்வது சிறப்பு. சிவாலயத்திலும் செய்யலாம். ஆனால், நவக்கிரஹ வழிபாடு, வணங்குதல், சுற்றுதல் கூடாது.
4. இந்த ஒன்பது வார நெய் விளக்கேற்றும் காலத்திலேயே, சுதர்சன சக்கரத்தாழ்வாரையும் தொடர்ந்தாற்போல, இருபத்தேழு நாட்கள் , ஒவ்வொரு தரிசனத்தின் போதும், இருபத்தேழு சுற்றுகள் சுற்றி வந்து வழிபட வேண்டும். ஓம் ஸஹஸ்ராய ஹீம்பட் என்று உச்சரித்துக் கொண்டே சுற்றி வருதல் வேண்டும். முதல் நாள் ஒரு நெய் தீபம் கொண்டு, இருபத்தேழு விளக்குகள் ஏற்றிய பின்னர் சுற்றி வரவேண்டும். மற்றும் 9 , 18 , 27 , மற்றும் 28 ஆம் நாட்களிலும் இருபத்தேழு நெய் அகல் தீபங்கள் ஏற்றிட வேண்டும். இதர நாட்களில், ஐந்து ஊதுவத்திகள் ஏற்றினாலே போதுமானது.
5. இப்பரிகாரம் முடித்த பின்னரே , வையம் காத்த பெருமாள் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். கொடி மரம் வணங்கி, ஆலய வலம் வரவேண்டும். வலம் வந்த பின்னர், சங்கு உருவாகியுள்ள பலா மரத்தினருகே ஐந்து நெய் அகல் தீபங்கள், ஊதுவத்தி ஏற்றி வழிபட்டு, அதன் பின்னரே மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து, கருடாழ்வார் முன்பாக, ஐந்து தீபமேற்றிட வேண்டும். இத்தலத்தில் , பெண்களுக்கான திருமண வரம் நல்குபவரே தாயார் தான். அதனால் தாயாருக்கும், மஞ்சள் குங்குமம் கொடுத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர், இரு நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
மும்முறை இட வலமாக ஐந்து சுற்றுகள் சுற்றிவந்து, கொடிமரத்தினருகே சாஷ்டாங்க நமஸ்கரித்து, இருபது நிமிடம் அமர்ந்து, இருபத்தோராம் நிமிடம் யாருக்கும் பிச்சையிடாமல் இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருக்குமரனுக்கு ஒரு நெய் தீபமேற்றி , தீபம் அணையும் வரை பூசையிலிருந்து பரிகாரம் முடிக்கவும்.
மஹாலஷ்மித் தாயாரிடம் திருமண வரமும், சுபிட்ஷமான வாழ்க்கை அமையவும் வேண்டுதல் வேண்டும். திருமணம் முடிந்தவுடன், கணவனுடன் வந்து, பிரார்த்தனையின் படி ஏதாகிலும் செய்ய வேண்டும்.
பிரார்த்தனை :
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளம் சிறுவ சிறுமியருக்கு, ஏழை விதவைத் தாய்மார்களுக்கு, முதுமையான பெரியவர்களுக்கு அன்னதானம், புதிய உடை தானம் செயவது சிறப்பு.
இவ்வைந்து பரிகாரங்கள் செய்பவருக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக