| உலக பணக்கார பெண்களில் ஒரே ஒரு இந்தியர் |
|
|
| செவ்வாய், 16 ஜூன் 2009( 11:32 IST ) |
|
|
|
| |
|
|
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 நபர்களில் 4 அல்லது 5 இந்தியர்கள் இடம்பெற்று விடுவார்கள். ஆனால், உலக பணக்கார பெண்கள் பட்டியலிலேயே ஒரே ஒரு இந்தியப் பெண்மணிதான் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஜிண்டால் குடும்பத்தைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால்.
ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்கார பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுகிறது. இந்த ஆண்டும் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் வால்மார்ட் நிறுவன அதிபர் கிறிஸ்டி வால்டன். இவர் தொழிலதிபர் ஜான் வால்டனின் மனைவி. ஜான் வால்டன் 2005ல் நடந்த விமான விபத்தில் இறந்தார். அப்போது அவரது சொத்து ரூ.73,900 கோடி கிறிஸ்டியிடம் வந்தது. அதை இப்போது ரூ.1,00,000 கோடியாக அதிகரிக்கச் செய்துள்ளார் கிறிஸ்டி வால்டன் (சபாஷ்). 2 வது இடத்தில் கிறிஸ்டியின் நாத்தனார் (ஜான் வால்டனின் சகோதரி) அலைஸ் உள்ளார். வால் மார்ட் நிறுவனங்களின் நிறுவனர் சாம் வால்டனின் மகள் இவர். இவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.91,650 கோடி. கடந்த ஆண்டு இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் லிலியன் பெட்டன்கோர்ட். அப்போது இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.70,500 கோடி. அழகுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்ஓரியல் நிறுவனர் ஈஜின் சுல்லரின் மகள் இவர்.200 பெண்கள் அடங்கிய உலக பணக்காரர்கள் பட்டியலில், ஜிண்டால் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 9வது இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய பெண் இவர்தான் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.58 வயதாகும் சாவித்ரி ஜிண்டால், ஹூடா அமைச்சரவையிலும் இடம்பெற்றவர். இவர் இந்தியாவின் பணக்கா பெண்களில் முதல் இடத்தில் இருப்பவரும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜிண்டாலின் கணவர் ஓ.பி. ஜிண்டால் கடந்த 2005ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹிசார் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் நின்று பெரும் வாக்குகள் வித்திசாத்தில் வெற்றி பெற்றார் சாவித்ரி ஜிண்டால். ஜிண்டால் தம்பதிகளுக்கு 4 பிள்ளைகளும், 5 மகள்களும் உள்ளனர். அதில் நவீன் ஜிண்டால் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில் அதிபருமாவார். ஜிண்டால் குழுமம் சார்பில் இரும்பு, ஸ்டீல், எரிசக்தித் துறைகளில் சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், தென்அமெரிக்க நாடுகளான சிலி, பொலிவியா, பெரு ஆகியவற்றிலும் நிறுவனங்களை நடத்தி வருகிறது ஜிண்டால் குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக